மாறா படத்தை முதலில் சொல்கிறேன், சரியா?
யாரெல்லாம் இப்படத்தை காணவில்லையோ,
தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.
“96” படத்திற்கு பிறகு நான் பார்த்த
அழகான காதல் படம் இது.
மாறா படத்தில் மாதவன்—
நடுத்தர வயது, நரைமீசை, தாடியுடன்
மாறாவாக வருவது ஒரு மாற்றம்.
அவரைப் பார்க்காமல் மனதார காதலிக்கும்
பாரு கதாபாத்திரம் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும்,
மாறாவின் அப்பாவித்தனமும்,
வாழ்க்கையின் நேர்மறை பக்கத்தைக் கொண்டாடும்
அவரது தன்மை பாருவை காதலிக்க வைக்கிறது.
மாறா ஒரு நாடோடியாக இருப்பான்.
புத்தாண்டு தினத்தன்று வீட்டில் திருடனை
விருந்துக்கு அழைக்கும் ஆடவர்.
நள்ளிரவில் குல்பி வாங்கி
ஐஸ்கிரீம் விற்பவரை புன்னகைக்க வைப்பவர்.
தன்னுடன் இருந்த ஒருவரை காப்பாற்ற முடியாததை
எண்ணி வருந்துபவர்.
தன்னால் முடிந்த உதவிகளை
யாருக்காவது செய்து கொண்டே இருப்பவர்.
தன்னை வளர்த்த முதியவரின் காதலை
சேர்த்துவைக்காமல்,
தன் வாழ்க்கை முழுமையடையாது என எண்ணி,
அந்த காதலியை ஊர் ஊராக தேடி அழைக்கிறார்.
அதே நேரத்தில் பாரு அவரை தேடுகிறாள்.
இறுதியில், பாருவே அந்த முதியவரின் காதலியை
தேடித் தருகிறாள்.
அர்த்தம் புரியாத அர்புதமாக
பாருவின் மீது காதலிக்கிறார் மாறா.
இப்படியே கதை முடிகிறது.
---
இந்த கதையில் எனக்கு பிடித்தது—
மாறாவின் தன்னலமற்ற செயல்கள்,
மற்றவர்களுக்கு உதவ முனையும் மனநிலை,
தனிப்பட்ட தியாகங்களைச் செய்யும் துணிவு.
முக்கால்வாசி மனிதர்கள்
சுயநலமாகவே இருப்பதைக் காணும்
இந்த உலகத்தில்,
ஒருவரின் நேரத்தை மற்றொருவருக்காக
செலவிடுவது என்பது
என்னை மிகவும் நெகிழ வைத்தது.
தனக்கு அடைக்களம் கொடுத்தவரின் காதலை
சேர்த்தவுடன் மாறாவின் கண்களில்
வெளிவரும் கண்ணீர் துளிகள்—
என் மனதை ஆழமாகக் கழங்க வைத்தது.
---
நம் வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது.
அதை நமக்கு முக்கியமானவர்களுடன்
செலவிடுகிறோம்.
ஒவ்வொருவருக்கும்
தனது நேரத்தை செலவிடுவதில்
வித்தியாசமான விருப்பங்கள் உள்ளன.
சிலர் தனிமையில் அதிகமாக அனுபவிக்கிறார்கள்.
ஒருவர் தனிமையின் சுகத்தை
அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால்,
அதிலிருந்து மீண்டும் வர
நேரமும் காலமும் தேவைப்படும்.
---
எனக்கு நண்பர்கள் இல்லாத வாழ்க்கை
கற்பனை கூட முடியாது.
நண்பர்களுடன் நேரம் செலவழிக்க
எந்த வாய்ப்பையும் இழக்கவில்லை.
ஏனெனில் அவர்கள் என் வாழ்க்கையின்
உந்துசக்திகள், ஆலோசகர்கள்,
மகிழ்ச்சியின் காரணிகள்.
---
என் காதல் தோல்வியை
எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தனிமைபடுத்திக்கொண்டு
யோசிக்க ஆரம்பித்துள்ளேன்.
இனம் புரியாத கேள்விகள்
என் மனதினுள் தூங்கவிடாமல் செய்கின்றன.
ஏன் என்னை காதலிக்கின்றவர்கள்
நீண்ட நாட்கள் என்னுடன் இருக்க முடியவில்லை?
மாறா போன்ற படம்
என் வாழ்க்கை பெரிது,
உலகம் நீளமானது
என்று உணர்த்துகிறது.
என் ஆசைகளில் ஒன்று—
புதிய இடங்களுக்கு சென்று
புதிய அனுபவங்களை சேர்ப்பது.
---
இப்போது என் வாழ்க்கையில்
ஒரு மாற்றம் மிகவும் அவசியமாக உள்ளது.
மாறா படத்தை பார்த்தவர்கள்
இவ்வளவு உணர்ந்திருப்பார்களா
என்று கேட்கலாம்.
நான் உணர்ந்ததற்கு
என் காதல் தோல்விதான் காரணம்.
விக்ரமின் நினைவுகள் என்னை விட்டு செல்லவில்லை.
என் பூமியில் பூத்த கடைசி பூதான் விக்ரம்.
இதற்குமேல் பூக்கள் பூக்காது.
வண்டுகளும் இருக்காது.
வரண்டதொரு பூமியாகவே போகட்டும்.
இது இறைவனின் ஆசை என்றால்,
அதை ஏற்றுக்கொள்கிறேன்.
---
*இப்படிக்கு,
ஆறாத மாறாத வலியுடன்,
ஆராதனா*
Comments
Post a Comment