அத் 10:- என் வாழ்க்கை என்ன சுடுகாடா!! வந்தவனெல்லாம் வாய்க்கரிசி போட....

“அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்”
என்பதை உணரும்போது,
சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உன்னைப் போன்றவர்கள்—
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

என் வாழ்க்கை சுடுகாடா?
வந்தவனெல்லாம் வாய்க்கரிசி போடுகிறான்...

இந்தச் செய்தி,
உண்மையான துயரச் செய்தியாக மாறி,
மனதுக்குள் உக்கிரமாகி,
உச்சம் தொட்டு, காயப்பட்டு,
ஊனமானேன்—உடலாலும் மனதாலும்.

*அமைதியான முகம்,
தெளிவான பார்வை,
திடமான சிந்தனை,
கனிவான குரல்—*
“ஜெயித்தே தீருவேன்” என சொல்லும்
உடல்மொழி கொண்ட துணிவான அவளை
தற்கொலைக்கு தூண்டியது யார்?

தற்கொலை
நனக்குக் கிடைக்கும் விடுதலை அல்ல.
நாம் நம்மவர்களுக்கு அளிக்கும் தண்டனை.
நமது காயங்களும், கண்ணீர்களும்
நமக்கே சொந்தமானவை.
அவைகளை ஒருபோதும்
நம்மவர்களுக்கு மாற்றிவிடமாட்டேன்
தற்கொலை எனும் பெயரில்.

நீ தந்த காயங்களும் கண்ணீர்களும்
இன்னும் என்னுடன்
பத்திரமாக இருக்கின்றன, விக்ரம்.

நான் அவனை கவனிப்பதே இல்லை.
இன்று எண்ணி,
அவன் கலக்கத்தில் இருக்கிறான்.
விக்ரம் கொடுத்த பரிசுகளை
இன்னும் பிரிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்த பின்...

பாவம், அவனுக்கு என்ன தெரியும்?
அவன் என்னை கவனிக்காத நேரத்தில்,
அவனே என் காதல் பாடமாக இருக்கிறான்.

*தற்காலிகமாக என்னை காதலித்து,
நிரந்தர வலியை தந்தவனே...*
காதலின் காயம்
என்னை மட்டும் அல்ல,
உன்னையும் ஒருநாள் தாக்கும்.

அப்போது உணர்வாய் நீ—
உண்மை காதலின் வலியை.

---

*இப்படிக்கு,
எழுத மட்டுமே தெரிந்த,
அல்லது துணிந்த
ஆராதனா.*

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மையான வரிகள்... ஆழமான கருத்து... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment