"வெளிச்சம் இல்லாத வெண்ணிற இரவுகளில் இருவரும் சேர்வோம்..."
மனதிலுள்ள ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில் மறைந்துக்கொள்கிறது.
விழிகளை மூடிக்கொள்,
என்ன ஆசைகளை நிறைவேற்ற...
உன்னுள் உறைந்து
உலகம் மறக்க ஆசை...
என்னை எப்படி வென்றாய்
எனக்கே தெரியாமலே...
இப்படி ஒரு கவிதை தோன்றியதும்,
நான் நிறைமாத கற்பினியாக இருப்பதைப்போல் ஒரு கனவு.
இன்றுவரை அந்த கனவு நினைவில் இருக்கிறது.
ஆச்சர்யம் என்னவென்றால்,
அன்று என் கனவில் விக்ரம்.
அதுபோலவே காலையிலேயே விக்ரமிடமிருந்து WhatsApp வழியாக செய்தி வந்தது—
அவரது வீட்டின் வாடகை வசூலிக்க என் இடத்திற்கு வருவதாகவும்,
அப்படியே என்னை மதிய உணவிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
நானும் "சரி" என கூறி கிளம்ப ஆரம்பித்தேன்.
*"உன்னை காண துடிக்கும் என் கண்களை,
மதியம் வரை பொறுத்திருக்க கெஞ்சுகிறேன்...
உன் நினைவோடு கொஞ்சி விளையாடும் என் மனதை,
விடியல் வரை அமைதிகாக்க வேண்டுகிறேன்..."*
இப்படியாக விக்ரமை சந்தித்தேன்.
10 வருடம் கழித்து, ஒரு பெரிய உருவம் கொண்ட ஆடவராக விக்ரம்.
என் கண்களை நம்பவே பல வினாடிகள் எடுத்துக்கொண்டேன்.
என்னை விட மிகவும் உயரமாக இருந்தார்.
என் வாடகை வீட்டிற்கு வந்த விக்ரம் சுற்றி பார்த்துவிட்டு,
"வீடு சின்னதாக இருக்கிறது,
செங்களை எப்படி பயன்படுத்தினால் எவ்வளவு காலம் தாங்கும்,
இந்த கட்டிடம் 100 வருடம் தான் தாங்கும்,
பிறகு இடித்து புதிய கட்டிடம் கட்டுவார்கள்" என
பொறியியல் சார்ந்த தகவல்களை பகிர்ந்தார்.
எனக்கு என்ன பதில் கூறுவது தெரியாமல்,
அனைத்திற்கும் தலையாட்டினேன்.
பிறகு, "உனக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் இருக்கிறதா?" என கேட்டார்.
"இருக்கிறது, ஆனால் 3–4 வருடங்கள் ஆகும்" என பதிலளித்தேன்.
அவர் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.
எனக்கு வெட்கமாகி,
"என்ன குடிக்கிறீங்க?" என பேச்சை மாற்ற முயன்றேன்.
அவர் என்னை உட்காரச் சொல்லி,
என் எதிரில் அமர்ந்து,
"நீ தான் என் சின்ன வயதின் காதலி" என கூறினார்.
என் முகம் சிவந்து,
என்ன கூறுவது என தெரியாமல்,
"வாங்க, வெளியே செல்வோம், பசிக்கிறது" என கூறினேன்.
வெளியே சென்று உணவு உண்டபின்,
அவருடைய வாகனம் நிறுத்திய இடத்தில் விடைபெறும்போது,
"நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என என் கண்களை பார்த்துக்கொண்டே கேட்டார்.
நான் திக்குமுக்காடி,
"நான் நிறைய வலிகளை சுமந்திருக்கிறேன்,
எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்" என கூறினேன்.
விக்ரமும் "சரி" என கூறி,
அவரின் வாகனத்தை எடுத்து வீட்டிற்குச் சென்றார்.
நான் உடனே கார்த்திக்கிடம் தொடர்பு கொண்டு நடந்ததை கூறினேன்.
அவர் "நீ நல்ல காரியம் செய்திருக்கிறாய்" என பாராட்டினார்.
"இந்த முறையில் தவறு செய்யாதே,
விக்ரம் பற்றி நன்கு புரிந்து கொண்டு,
அவரின் திருமண அல்லது காதல் முன்மொழிவை ஏற்றுக்கொள்" என கூறினார்.
நான் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவை எடுத்தவுடன்,
இனி எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்
நான்கு பேரிடம் கேட்க ஆரம்பித்தேன்.
அதில் ஒருவர் கார்த்திக்.
என் முன்னாள் பள்ளி தோழிகள் வைஷ்ணவி மற்றும் சஞ்ஞனா இருவரிடம் கேட்டபோது,
"தயவு செய்து அவசரப்படாதே,
நன்கு யோசித்து முடிவு எடு,
பழகு, விக்ரமின் தன்மை பிடித்திருந்தால் பின் பதிலைச் சொல்" என எச்சரித்தனர்.
அதில் சஞ்ஞனா கூறியது முக்கியமானது:
"வேறு இடத்தில் உள்ள பையன் நம் பழைய வாழ்வை தெரியாமல்,
நாம் சொல்வதையே கேட்டு புரிந்து வாழ்வார்கள்.
ஆனால் ஒரே இடத்தில் உள்ளவனோ அல்லது ஒன்றாக படித்தவனோ
நம்மை பற்றி அ முதல் ஃ வரை தெரிந்திருக்கும்.
ஏமாற்றுவதற்காகவே காகம் போல் சுற்றி வருவார்கள்.
ஏமாந்துவிடாதே, நன்கு யோசி" என கூறினார்.
நான் ஆராதனா,
வைஷ்ணவி மற்றும் சஞ்ஞனா மூவரும் இணைபிரியா நண்பர்கள்.
பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.
"எனக்கு ஏன் விக்ரம் என் வாழ்வில் வந்தார்?"
"கடவுள் ஒரு மாற்றத்தை தருவதற்காகவே அவரை அனுப்பியிருக்கிறாரா?"
எனவெல்லாம் எண்ணங்கள் எழுந்தன.
என் முன்னாள் வாழ்க்கையில்,
என்னை பதிவு திருமணம் செய்ய துணிந்த ஆணுக்கு
என்னை திருமணம் செய்துகொள்ள தைரியம் இல்லை.
ஆனால், விக்ரம் எடுத்த ஒரு எடுப்பிலேயே
மணந்துகொள்ள ஆசை இருக்கிறதா?
அதன் அர்த்தம் என்ன?
என புரியாமல்,
பித்துபிடித்ததுபோல் சுற்றிக்கொண்டிருந்தேன்.
இறுதியில்,
கோவிலுக்குச் சென்றேன்.
Comments
Post a Comment