கோவிலுக்குப் போனது உண்மையில் கல்யாணம் வேண்டுமென்ற எண்ணத்தால் அல்ல.
விக்ரமிடம் அப்படி பொய் சொன்னேன். என் மனம் அமைதியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தது. அதனால்தான் திருவண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றேன். அன்று நவராத்திரி நான்காம் நாள். கோவிலில் பேச்சியம்மன் சாமி பூசாரியின் உடலில் இரங்கியிருந்தார்.
ஆரம்பத்திலிருந்தே சாமி பார்ப்பது, சாமி அழைப்பது, சாமி ஒருவரின் உடலில் இரங்குவது போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், அன்றைய தினம் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் அம்மனின் ஆசியைப் பெற வரிசையில் நின்றிருந்தனர். நானும் அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் ஆர்வத்துடன் நின்றிருந்தேன்.
அனைவருக்கும் ஆசி வழங்கிய பிறகு, இருதியில் நின்ற என்னையும் அம்மன் அழைத்தார். சேலை கட்டியிருந்ததால் படிகளை ஏறுவது சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டு ஏறி அம்மனின் முன் நின்றேன். அம்மன் உட்காரச் சொன்னார். சேலையை சுருட்டி உட்கார்ந்தேன்.
அப்போது அம்மன் கண்களை மூடி, மனதில் கைவைத்து, "உனக்கு திருமணம் வேண்டுமா?" என்று கேட்டார். தெளிவாக கேட்கவில்லை என்பதால், "என்ன அம்மா?" என்று கேட்டேன். மறுபடியும் சத்தமாக கேட்டார். நான் சிரித்தபடியே தலையை ஆட்டினேன். ஏனெனில் என் மனதில் அதைத்தான் நினைத்திருந்தேன்—எனக்கே கல்யாணம், குழந்தை, குடும்பம் ஆகியவை நடக்குமா என்று.
பிறகு, அம்மன் என் தலையில் குங்குமக் கையால் அடித்து, "நானே உனக்கு ஒரு நல்ல பையனைக் பார்த்து தரேன்" என்று கூறி, என் கைபிடி முழுக்க குங்குமம் பூசினார்.
அங்கிருந்து எழுந்து, குங்குமத்தை ஒரு காகிதத்தில் மடித்து வாகனத்திற்குச் சென்றேன். வாடகை வீட்டின் வெளியில் வாகனத்தை நிறுத்தி, வீட்டிற்குள் நுழைந்தேன். பூஜை மேடையில் குங்குமத்தை வைத்துவிட்டு, கோவிலில் எடுத்த தம்படங்களை ஸ்டேட்டஸில் போட்டேன். கோவிலில் நடந்ததை நினைத்து சிரித்தபடியே TikTok செய்தேன்.
அப்போதுதான் விக்ரம் WhatsApp வழியாக என்னிடம் பேசினார். (அத்யாயம் 1)
படுக்கைக்குச் சென்று அம்மன் கூறியதை நினைத்து அழுதேன். "நான் காதலித்த ஆண் தவறானவனா? இல்லை, எனக்கே சரியான ஆணை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லையா?" என்ற எண்ணத்தில் ஒரு கவிதை எழுதியேன்:
---
காதல் தோல்வி கவிதை
என் கண்களுக்கு தெரியும்
நீ நிஜம் இல்லை என்று...
உன் விரல் பிடித்து நடந்த என் கைகளுக்கு தெரியும்
நீ சொன்னது அனைத்தும் பொய் என்று...
உன் பாத அச்சில் நடந்த என் கால்களுக்கு தெரியும்
நீ நடித்தது நாடகம் என்று...
உயிர் இல்லாத என் மனதிற்கு மட்டும் தெரியவில்லை
நீ எனக்கு செய்தது துரோகம் என்று...
உயிர் உள்ள என் மனம் இறந்துபோனது
உன்னை நினைப்பது பாவம் என்று என்னி...
---
கவிதையை முடித்து, "இனிமேல் நான் ஏன் கண்டவனை நினைத்து அழவேண்டும்?" என்று எண்ணி, அம்மன் கூறிய "நல்ல மாப்பிள்ளை" நம்பிக்கையுடன், பழையதை மனதிலிருந்து நீக்கி, மனதை ஆருதல்படுத்தி தூங்கினேன்.
விடியும் வரை கனவின் நிலை...
*இப்படிக்கு,
ஆராதனா*
Comments
Post a Comment