என் குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆசையுடன், விக்ரம் என்னை தொடர்புகொள்வதற்காக என் WhatsApp எண்ணிற்கு அழைத்திருப்பார் போல கூறினார். நான் சிரித்தபடியே என் அழைபேசி எண்ணை கொடுத்து, “WhatsApp-க்கு வேறு எண், அழைப்புக்கு வேறு எண் பயன்படுத்துகிறேன்” என்று சொன்னேன். அதற்கு விக்ரம் எப்போதும் போல ஸ்டிக்கர் போட்டு கலாய்த்தார்; அது என் முகத்தில் புன்முருவலை ஏற்படுத்தியது.
விக்ரம் முதன்முறையாக என்னை அழைத்தார். வெகுநேரம் எதைப் பேசுகிறோம் என்பதற்கே தெரியாமல் உரையாடினோம். பெரும்பாலான பேச்சு அவருடைய பொறியியல் படிப்பைப் பற்றியே இருந்தது. எனக்கு பலமுறை, “விக்ரம் என்னுடன் இடைநிலை படித்தாரா?” என்ற சந்தேகம் வந்தது. ஏனெனில், நான் ஒரு புத்தகப் புழு. கல்வியின்பால் எனக்கு மோகமா, பிரியமா எனத் தெரியவில்லை. இடைநிலை முடியும் வரை எவரையும் காதலிக்கவே இல்லை.
என்னை காதலிக்கிறேன் என வந்த என் தோழன் அர்ஜுனை, கருத்துரை ஆசிரியரிடம் புகார் செய்தவள்தான் நான். பாவம் அந்தப் பையன். சமீபத்தில் அவனிடம் மன்னிப்பும் கேட்டேன். அவன் இன்னும் என்னிடம் ஆசை வைத்திருப்பதாக கூறினான். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாததால், “நண்பராகவே இருப்போம்” என்று கூறி, அந்த அத்தியாயத்தை முடித்துவிட்டேன்.
அழைப்புக்குப் பிறகு, சில நிமிடங்களில் விக்ரமிடமிருந்து WhatsApp-ல் செய்தி வந்தது. அதில், விக்ரம் முதன்முறையாக என்னை “பாப்பா” என்று அழைத்தார். அந்த வார்த்தை என் அம்மா, அப்பா என்னை சிறுவயதில் அழைத்த நினைவுகளை மீட்டெடுத்தது. அவ்வப்போது விக்ரம் என் இதழில் சிரிப்பை ஏற்படுத்தி, என் இதயத்தில் இடம் பிடித்தார்.
நான் கடந்த காலத்தில் நடந்த கொடுமைகளை விக்ரமிடம் பகிர்ந்தபோது, என் மனம் லேசாகியது. அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆருதலாக இருந்தது. விக்ரம் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதிற்கு மருந்தாக இருந்தது.
விக்ரம் எனக்கு கொடுத்த சத்தியம் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. “நீ கடந்த காலத்தை மறந்துவிடுவாய். ஏன் 10 வருடங்களுக்கு முன்னே உன்னை நான் சந்திக்கவில்லை?” என்று கூறியபோது, அந்த இரண்டு வார்த்தைகள் என் மனதை ஆழமாக யோசிக்க வைத்தது.
Nice
ReplyDelete