அத் 1:- உந்தன் கையோடு சேர தினம் ஏங்கும் துணை நான்

16 அக்டோபர் 2020


என் ஸ்டேட்டஸைப் பார்த்து ஒரு முயல் இமோ அனுப்பினாங்க. அந்த நேரத்தில் எனக்கு சில பிரச்சனைகள் இருந்ததால், அதை நான் பெரிதாகக் கவனிக்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி, என் தனிப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன்.


20 அக்டோபர் 2020


திருவண்ணாமலையார் கோவிலுக்கு போயிருந்தேன். "கல்யாணம் ஆக வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன். அன்றும், என் ஸ்டேட்டஸைப் பார்த்து, "இப்போ எந்த கோவில் திறந்திருக்கு?" என்று கேட்டாங்க. கொரோனா காலம் என்பதால், கோவில்கள், பள்ளிகள், கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. அதனால், "நான் எப்படி கோவிலுக்கு போயிருக்க முடியும்?" என்று பதில் சொன்னேன். ஆனால், அப்போது நவராத்திரி பூஜை கோவிலில் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.


அன்றே, சமீபத்தில் நடந்த காதல் மற்றும் கல்யாண பதிவு முரிவு பற்றிய விஷயங்களை அவரிடம் பகிர்ந்தேன். அதைக் கேட்ட அவர்கள் ஆச்சரியப்பட்டு, இடையில் ஸ்டிக்கர் போட்டு கலாய்த்தார்கள். அந்த நாளிலேயே, காதலின் மீது எனக்கு விருப்பமும் நம்பிக்கையும் இல்லாமல் போனது. "சேர்ந்து வாழ்வது எல்லாம் பொய்" என்று கூறினேன். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். அவர்களின் கருத்துப்படி, 28 வயது கல்யாணத்திற்கு சரியான வயது என்றும், கல்யாணத்திற்கு முன் பழகுவது அவசியம் என்றும் சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட காதல் முரிவால், நான் மறுத்தேன்.


கார்த்திக் என் நண்பன். மூன்று மாதங்களுக்கு முன் பதிவு முரிவு முடிந்தபின் அறிமுகமான ஆண் சகோதரன். அவரிடம் நடந்ததை எல்லாம் கூறியபோது, என்னை தனது உடன்பிறவா சகோதரியைப் போல கவனித்தார். "இதற்குப் பிறகு உன் வாழ்க்கையில் நடக்கப்போவதெல்லாம் எனக்கு சொல்லி வைக்கணும். யாரும் உன்னை ஏமாற்றக்கூடாது" என்ற நல்ல எண்ணத்துடன் சொன்னார். அதன்படி, நான் எங்கு சென்றாலும், என்ன முடிவு எடுத்தாலும், யாரிடம் பேசினாலும், அவரிடம் சொல்லாமல், அவரின் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன்.


நீங்க நினைக்கலாம், "யாரென்று தெரியாமல் எப்படி நம்புறே?" என்று. ஆனால், அதுதான் நான். எல்லாரையும் உடனே நம்பிடுவேன். என் நம்பிக்கை வீணாகாது இவரிடம். உண்மையில் ரொம்ப நல்ல பையன் தான்.


விக்ரம் பற்றி கார்த்திக்கிடம் சொன்னேன். விக்ரம் என் முன்னாள் பள்ளி தோழன். 10 வருடங்களுக்கு மேலாக பழக்கம். இப்போது WhatsApp-ல் பேசிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அவரைப் பற்றியே சொல்ல வந்தேன். கார்த்திக்குக்கு விக்ரம் பிடித்துப் போனது. "நல்ல பையனாக இருக்கலாம் போலிருக்கு. உன் தனிமையை போக்க, நிறைய நண்பர்களை உருவாக்கி பழகணும்" என்று சொன்னார். நான் "சரி" என்று சொல்லி, விக்ரம் கூட WhatsApp-ல் இரவு 11:59 வரை பேசினேன். எனக்கு அப்போது கூட விக்ரம் மீது எந்த அபிப்பிராயமும் வரவில்லை.


அன்று இரவு, விக்ரம் என்கூட பேசும்போது, "மேற்கல்வி முடிக்க இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது" என்று சொன்னார். என் காதல் முரிவு எப்படி நடந்தது, யார் தவறு செய்தார் என்று கேட்டார். நான் சொல்ல மறுத்தேன். பிறகு, "உங்க சைட்டில் மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க" என்றேன். அதற்கு, "நல்ல மாப்பிள்ளை பார்த்து தரேன்" என்று சொன்னார். என்னை ஏதாவது சாப்பிட்டுவிட்டு படுக்கச் சொன்னார். அவர் உறங்க சென்றார். நான் கோவிலில் நடந்ததை நினைத்து சிரித்தபடியே TikTok செய்தேன். பால் கலக்கி குடித்துவிட்டு நானும் தூங்க சென்றேன்.


உங்களுக்கு தோன்றும், "கோவிலில் என்ன நடந்திருக்கும்?" என்று. அடுத்த பதிவில் சொல்றேன். சரியா?


*இப்படிக்கு,

தனா*

Comments