அத் 6:- கானல் நீர்

*ஒருநாள் தன்னாலே

உயிர் போகுமே...

நான் உனக்காக உயிர் வாழுவேன்.*


இதற்குமேல் என் வாழ்வில்

எந்த ஒரு ஆணுக்கும் இடமில்லை.

உன் நினைவுகளே போதும்.


என் பிறந்த நாளுக்கு நீ கொடுத்த பரிசை

நான் பிரிக்கப் போவதில்லை.

ஒருநாள் உன்னுடன் சேரும் நாள் வரும்.

என் இதயத்தில் உனக்கு என்றும் ஒரு இடம் உண்டு.


இன்று 14 பிப்ரவரி...

இரண்டு வருடங்கள் கழித்து

இதே நாளன்று உன்னை சந்திக்கும் நாளை

எண்ணி வாழ்கிறேன்.


---


*கருவிழியின் இருவிழியால்

என்னை ஒரு வழியாக்கினாய்...

கானல் நீர் எனத் தெரிந்தும்,

காதல் என்னுள் உன்னைக் காணும்

அந்த நொடிகளில்...*


---


எங்கேனும் நீ வாசிக்கும்

ஒற்றை வரியில் என் ஞாபகம் வந்தால் போதும்.

நான் பிரசவித்த அத்தனை கவிதைகளும்

உன்னை தழுவி மோட்சமடைந்ததாய் எண்ணிக்கொள்வேன்.


அன்று உன் குரலை கேட்டதும்

சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.

இன்று உன் குரலைக் கேட்டதும்

நினைவுகளால் கண்ணீர் வருகிறது.


---


வெளித்தோற்றத்தை எவ்வளவு அழகாக வைத்திருந்தாலும்,

தனிமையில் சில நேரங்களில்

என்னை மீறி வரும் கண்ணீர் துளிகளை

என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.


நாம் ஒன்றாக இருந்த நாட்களில்

ஆசையாக கேட்டுப் பாட்டுடன் உறங்கிய

அந்த பாடல்களை மீண்டும் கேட்கும் போதெல்லாம்

தலையணையை கட்டியணைத்து கத்துகிறேன்.


நீ செல்லமாகத் தந்த

சின்ன சின்ன ஞாபகங்கள்—all slowly killing me.

நீ வாங்கித் தந்த பரிசுகள்

இன்றும் பிரிக்காமல்,

விம்மி விம்மி அழுதும் அந்த நினைவுகள்

இன்றும் மறையவில்லை.


---


நாம் எடுத்த புகைப்படங்களை

அழிக்க முடியாமல் தவிக்கிறேன்.

உன்னை விட்டு செல்வதில் உறுதியாய் இருந்திருந்தால்,

அந்த பொய்யான வேஷங்கள் ஏன், கள்வனே?


"நான் உன்னை மறந்து போவேனா?"

என்று கேட்டால்,

இன்று பதில் இல்லை.

"மறக்கவேண்டும்" என்ற யதார்த்தத்தை உணரும் போது,

நாளை உன்னை விட்டு

தொலைதூரம் தான்...


---


*சமஸ்தானம் அஸ்தமனமானபின்

சிம்மாசனங்கள்

இருந்தென்ன...

சரிந்தென்ன?*


Comments