எப்படி இருக்கிறாய்? எங்கே இருக்கிறாய்?
நீ விட்டுச் சென்ற வலி,
கொஞ்சம் கூட குறையாமல்
அப்படியே என் உள்ளத்தில் இருக்கிறது.
உன்னைப் பற்றி நினைக்காத நாள் இல்லை,
உன்னோடு பேசாத நாள் இல்லை.
நீ அன்பாக பேசிய வார்த்தைகள்—all now wounds—
இன்றும் என் நெஞ்சில் பாய்கின்றன.
நீ பிரிந்து சென்ற காரணம் சொல்லாமல் சென்றாய்.
அதற்காக, உன்னை கேட்டு,
நித்தம் ஒரு வலைப்பதிவு எழுதுகிறேன்—
உன் முகவரி தெரியாமல்.
இது திட்டமிட்ட கதை என்றால்,
இத்தனை பெரிய பயணம் எதற்கடா, கள்வனே?
நீ ஏதோ ஒன்றில் நெருக்கமாய் இருப்பதால்,
என் நினைவு உனக்கு இப்போதைக்கு வரப்போவதில்லை...
என் தவறுதான்...
அன்பான வார்த்தைகளை
உண்மையான உறவுகள் என நம்பிவிட்டேன்.
அது தேவைக்காக வீசப்படும் தூண்டில் என
தெரியாமல், பாவப்பட்டவளாய் நான்.
பொய்யான இவர்களுக்கு
என் இதயத்தை கொடுத்து
நணமாக துடிப்பதை விட,
கசாப்புக் கடைக்கு கொடுத்திருந்தால்
யாரோ ஒருவருக்காவது பசி தீர்ந்திருக்கும்.
*புன்னகைத்து பேசுகிறேன்,
வலியற்றவளாய் காட்டிக்கொள்கிறேன்.*
இல்லையென்றால்,
நான் ஒதுக்கப்படுகிறேன்.
இமைகள் தாண்டி வெளிவராத
என் கண்ணீர்த் துளிகளை
என் கைளை தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை.
---
*நான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறேன்
அந்த நிலவைப் போல.*
உன் விழியை நீ மூடினால்,
முழுவதும் நான் இருண்டு போவேன்.
விழியைத் திறந்தாலும்,
பெளர்ணமிக்குள் ஒரு அமாவாசையைக் காண்கிறேன்.
ஒவ்வொரு நாளும்
இயல்பு நிலை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
உன் விழி மெய்யொளிக்கிறது.
என் மொழி பொய்யுரைக்கவில்லை.
---
*நான் வாசமானவள் என்று
வண்ணமலர் பச்சை குத்திக் கொள்வதில்லை.*
என் நேசத்தை வார்த்தைகளில் சொல்லாவிட்டால்,
அது வற்றிவிட்டதா?
உன் கடந்தகாலமும், என் கடந்தகாலமும்
கடந்து போன சுவடுகளில் தான்
நம் நிகழ்காலம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
*உன்னை காதலிக்கத் தொடங்கிய
முதல் வினாடியில்,
உன்னுள் தீக்குளிக்க ஆரம்பித்தேன்.*
அந்த அக்கினி வாசம்
இன்னும் அகலவேயில்லை.
காதலின் சுவடுகள்...
புத்தாண்டன்று என் காதலைச் சொன்ன நான்,
காதலர்கள் தினத்தன்று
நம் காதல் நிறுத்தத்துடன்
அதை நிறுத்திவிட்டது—தவறுதான்.
புரிந்து கொண்டேன்...
மௌனம் நண்பனாய் இருக்கும் போது மட்டுமல்ல,
காதலனான பின்னும்
மன்னிக்க முடியாததுதான்.
---
*இப்படிக்கு,
தனா*
Comments
Post a Comment