அத் 8:- நிச்சயம் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

சில நேரங்களில் இந்த வாழ்க்கை தரும் மாற்றங்களை

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது

எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா?


நாம் விரும்பி, நேசித்து,

கவலையின்றி வாழ்ந்த காலம்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்

ஒரு மாயக்கனவாக இருந்திருக்கிறது.


*என் புகார் என்னவெனில்—

ஏன் அந்த காலம் தொடரவில்லை?

ஏன் மனிதர்கள் மாறுகிறார்கள்?

ஏன் நாட்கள் நகர்கின்றன?*


நினைவுகள் மட்டும் தான்

அங்கேயே நின்று விடுகின்றன.

அழகானவை... ஆனால்

அவை மட்டும் மாற்றமின்றி நிலைத்திருக்கின்றன.


இப்போது என் அன்பை அணைத்துக்கொள்ள

நீ விரும்பவில்லை.

தேடி வரும்போதெல்லாம்

வார்த்தைகளால் அடித்து விரட்டி விடுகிறாய்.


ஆழ்மனம் வலியால் துடிக்கிறது.

அழுதுகொண்டே திரும்புகிறேன்.

சிறிது நேரம் கூட பொறுத்திருக்க முடியாமல்,

அன்பால் அணைத்துக்கொள்ள

என் பிஞ்சுள்ளம் உன்னிடம் ஓடிவருகிறது.

மறுபடியும் வலியோடு திரும்புகிறது.


*என்னை தேரிலேற்றி மகிழ்ந்த நீயிடம்தான்

இத்தனை மாற்றங்கள்?*

நீளும் சிந்தனையில் பதில்கள் தேடுகிறேன்.

நினைவுகள் கொதிக்கின்றன.


*வரம் தந்த கடவுளிடம் கைகூப்பி நின்றிடாமல்,

என்னை சொந்தமாக்க நினைத்தால்

எப்படி முடியும்?*


மனது சிரிக்கிறது,

தனது முட்டாள்தனத்தை எண்ணி.

துன்பங்கள் சுட்டெரித்த வாழ்வில்

நிழல்தந்த மாவிருட்சம் நீயடா விக்ரம்.


உன் அன்பில் முடிச்சிட்டு

சில காலம் என் மனம் ஊஞ்சலாடி மகிழ்ந்தது.

நீ தந்த வசந்தங்களை

யோசிக்காமல் ஏற்றுக்கொண்டதை போல,

என்னை வாட்டும் இந்த கோடையையும்

நிச்சயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.


இப்போது உன்னுடன்

உன் வெற்றிகளில் மகிழ்கிறேன்.

விடைபெறும் காலம் வந்தால்,

தூரமாக நின்று

உன் புன்னகையை ரசிக்கிறேன்,

பேரன்பிற்குரியவனே.


ஒருவர் மீதான அன்பு வளரும்போது

நம்பிக்கையும், உரிமையும்

கூடவே வளர்கின்றன.

நம்பிக்கை உடைந்து,

நீ யாரோவென உணர்த்தப்பட்டபோது,

உரிமையிழந்து நிற்கும் மனதிற்கு

எவ்வளவு பக்குவம் இருந்தாலும்,

உன் சுயம் ஆட்டம் பார்த்தும் கூட

விக்ரமை மீண்டும் பெற முடியுமா

என நப்பாசை கொல்கிறது.


*எனக்கு வலி தரும் என்பதை நன்கறிந்தும்,

சிலர் யோசிக்காமல் செயல்படுகிறார்கள்.*

என்னை வேண்டுமென்றே

வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்கள்.


வார்த்தைகளுக்கும் உயிருண்டு.

மனதினுள் பூகம்பமாய் உணர்ந்த

அந்த சொற்கள்

மன உழைச்சலில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அதை அறியாமல்,

இப்போது என் அம்மா

கடுஞ்சொற்களை கொட்டித் தீர்க்கிறார்.


*துரோகத்தின் வலி ஒருபுறம்,

வார்த்தைகளின் வலி மறுபுறம்.*

துன்பத்தில் உயிர் கரைந்து கொண்டிருக்கிறேன் டா விக்ரம்.


ஒரு கட்டத்தில்,

மனம் சோர்ந்து நடப்பதை

வேடிக்கை பார்ப்பதைவிட,

என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.


*இழப்பை எண்ணி வருந்தும் இந்நேரத்தில்,

விக்ரம் வேறொருவருடன் மகிழ்ந்து கொண்டிருக்கலாம்*

என்பதை என் மனம் புரிந்துகொண்டது.


*பட்டமரத்திற்கு அன்பு, காதல், பாசம், கண்ணீர்

அபிஷேகம் செய்தாலும்

அது உணரப்போவதில்லை.*

துளிகள் தோன்றப்போவதில்லை.


பல காதல்களையும்,

பல தோல்விகளையும் கண்ட எனக்கு

இதுவா இப்படியொரு வலியை தரப்போகிறது?


ஒரு மனிதன் ஒருமுறை தவறு செய்தபின்

திருந்துவான்.

ஆனால் ஏன் காதலில் மட்டும்

மருபடியும் அதே தவறை செய்கிறான்?


*கடந்த காதல் திருமண பதிவு வரை சென்று முறிந்தபிறகும்,

உன்னுடன் ஏன் மீண்டும் காதலுற்றேன்

என எனக்கே தெரியவில்லை, விக்ரம்.*


மீண்டும் வருவது கடினம்.

அப்பாதையை விட்டுவிட்டு

வேறுவழியில் மனதை செழுத்த

நான் முடிவெடுத்துள்ளேன்.


*என் நகர்வுகளின் சிறு சிறு வெற்றிகள்

முழுமையான வெற்றிக்கனியை பறிக்க

ஆர்வம் கொண்டுள்ளன.*

மனமும் அதன்வழி செல்ல ஆரம்பித்துவிட்டது.


*வலிகளை போக்க முயற்சி

எனக்குடையதாக இருக்கவேண்டும்.*

இன்னொரு அன்பை

காயத்திற்கு மருந்தாக்க நினைக்கமாட்டேன்.


அப்படி நினைத்தால்

மேலும் வலிகளை அனுபவிக்க நேரிடும்

என்பதில் தெளிவாக இருக்கிறேன்.


"இதற்கா அழுதோம்?"

என்று சிரிக்கும் நாள்

நிச்சயம் வரும்.


---


*இறந்த மீன்கள்

ஆற்றின் திசையில் செல்லும்...

உயிருள்ள மீன்கள் தான்

ஆற்றை எதிர்த்து செல்லும்.*


உனக்கே ஒரு வழி உருவாக்கு.


*இப்படிக்கு,

ஆராதனா*

Comments